பாஜகவுக்கு கதவை மூடிய குமாரசாமி:தாக்குப்பிடிப்பாரா?

பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்கிறார் பழனிசாமி!

திமுகவுக்கு எச்சரிக்கை: தினகரனோடு இணைந்த காங்கிரஸ்!

நடிகையர் திலகம் படம் பார்த்தேன்:மனுஷ்யபுத்திரன்

கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக தனிப்பெரும் கட்சியாக பாஜக 104 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 78 இடங்களையும், மஜத 38 இடங்களையும் கைப்பற்றியதால், யாராலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத சூழல். இந்நிலையில், பாஜக பாணி அரசியலையே கையில் எடுத்த காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாகவும், குமாரசாமி முதல்வராக ஆதரவளிப்பதாகவும் அறிவித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாஜக காங்கிரஸ், மஜத கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முயன்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் , மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை உடைக்க முயலும் விதமாக பாஜக குமாரசாமி முதல்வராக ஆதரவளிப்பதாக கூறியது. ஆனால் இதை மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி ஏற்க மறுத்து விட்டார். அவர் இன்று காலை பேசும் போது:-
“பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்று ஏற்கனவே முடிவாகி விட்டது. அதே நிலை நீடிக்கும்” என்றார். இதனிடையே 104 தொகுதிகளிலும் அல்லாடிக் கொண்டிருந்த பாஜகவை கர்நாடக பிரஞ்யாவந்த ஜனதா கட்சி என்ற கட்சியின் சார்பில் போட்டியிட்டு ராணி பென்னூர் தொகுதியில் வென்ற சங்கர் ஆதரித்திருக்கிறார். நேற்று இவர் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தார் . இன்று பாஜகவை ஆதரிக்கிறார். இதே போன்று இன்னொரு சுயேட்சையும் பாஜகவை ஆதரிப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில் குமாரசாமி ஆதரவு எம்.எல்.ஏக்களில் சிலர் பாஜக பக்கம் சாய இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பதால் தன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 38 பேரை தக்க வைக்க குமாரசாமி படாதபாடு பட்டு வருகிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*