விசுவாசம் : எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைக்கிறார் கர்நாடக கவர்னர்!

காவிரி மேலாண்மை வாரியம் என்னும் பெயரில் ஏமாற்று வேலை!

பாஜகவுக்கு கதவை மூடிய குமாரசாமி:தாக்குப்பிடிப்பாரா?

பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்கிறார் பழனிசாமி!

திமுகவுக்கு எச்சரிக்கை: தினகரனோடு இணைந்த காங்கிரஸ்!

நடிகையர் திலகம் படம் பார்த்தேன்:மனுஷ்யபுத்திரன்

இன்று இரவு பாஜக தலைமையிலான ஆட்சியை அமைக்க எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுக்கிறார் கர்நாடக மாநில கவர்னர்.
கர்நாடக கவர்னராக இருக்கும் வஜூபாய் வாலா மோடியின் குஜராத் அமைச்சர்வையில் நிதி அமைச்சராகவும், சபாநாயகராகவும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து மோடியின் நம்பிக்கைக்குரிய விசுவாசியாக இருந்தவர்.பல நேரங்களில் மோடிக்காக தன் பதவியை விட்டுக் கொடுத்த வாஜுபாய் வாலாவை காங்கிரஸ் ஆளும் மாநிலத்திற்கு ஆளுநராக நியமித்ததே பிரதமர் மோடிதான். அந்த வகையில் தன் விசுவாசத்தைக் காட்டுவதற்கான நேரம் வஜுபாய் வாலாவுக்கு வந்திருக்கிறது.
நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை எனும் பாஜக 104 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் பெரும்பான்மை பலத்தை அது பெறவில்லை. காங்கிரஸ் 78 தொகுதிகளையும், மஜத கட்சி 38 இடங்களையும் வென்றுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி மஜதவை ஆதரிப்பதாக அறிவித்தது. ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்த காங்கிரஸ், மஜத கட்சியினர் தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக எம்.எல்.ஏக்களின் கையெழுத்துடன் கூடிய கடிதத்தை கொடுத்தனர். பாஜக தலைவர் எடியூரப்பாவும் தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு அழைப்பு விடுத்தார். இரண்டு சக்திகள் ஆட்சியமைக்க உரிமை கோரும் நிலையில், பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ், மஜத கூட்டணிக்கு ஆளுநர் அழைப்பு விடுக்க மாட்டார் என்று தெரிகிறது. மற்ற கட்சி எம்.எல்.ஏக்களை உடைத்து குதிரை பேரத்தை பாஜக துவங்கி உள்ள நிலையில்,
பாஜக ஆட்சியமைக்கவே ஆளுநர் அழைப்பு விடுப்பார்.சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் போதுமான கால அவகாசத்தை ஆளுநர் கொடுப்பார் என்று தெரிகிறது. இன்று இரவு பாஜகவுக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து நன்றிக்கடன் தீர்ப்பார் என்கிறது அரசியல் வட்டாரம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*