கர்நாடகத்தில் ஜனநாயக படுகொலை: காங்கிரஸ் போராட்டம்!

விசுவாசம் : எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைக்கிறார் கர்நாடக கவர்னர்!

காவிரி மேலாண்மை வாரியம் என்னும் பெயரில் ஏமாற்று வேலை!

பாஜகவுக்கு கதவை மூடிய குமாரசாமி:தாக்குப்பிடிப்பாரா?

பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்கிறார் பழனிசாமி!

கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக பாஜகவின் எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார். பெரும்பான்மை இல்லாத மைனாரிட்டி முதல்வராக இருப்பதாலும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாலும் 15 நாள் கெடு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை பெற 112 இடங்கள் தேவைப்படும் நிலையில், வெறும் 104 இடங்களை மட்டுமே பாஜக பெற்றுள்ளது. ஆனால் 78 இடங்களை வென்றுள்ள காங்கிரஸ் கட்சியும், 38 இடங்களைப் பெற்றுள்ள மஜத கட்சியும் இணைந்து பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவுக்கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தபோதும் பெரும்பான்மை ஆதரவில்லாத எடியூரப்பாவையே ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தார்.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மனுத்தாக்கல் செய்தது இந்த மனு அதிகாலை 1-45 மணிக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டது, சுமார் மூன்று மணி நேரம் நடந்த விசாரணையின் பின்னர் கவர்னர் முடிவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. ஆனால் இந்த வழக்கை விசாரிப்பதாகவும் கூறியது.
உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்ட நிலையில், இன்று காலை எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இதனை கண்டித்து காங்கிரஸ், மஜத கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் விசான் சவுதாக்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மைனாரிட்டி அரசொன்று பதவியேற்றிருக்கும் நிலையில் பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவைக் கொண்டவர்கள் போராட்டம் நடத்துவதும் இந்தியாவையே கர்நாடக மாநிலத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*